தேசிய விருது பெற்ற ‘காதல் கோட்டை’.. ஒரு உதவி இயக்குனரின் நிஜ கதையா..? படத்தின் இயக்குனர் அகத்தியன் பகிர்ந்த தகவல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் திரைக்கதை மற்றும் இயக்கத்துக்காக தேசிய விருது வாங்கியது காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன்தான். தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க காதல் கதைகளுக்கான காலமாக அமைந்தது.

அந்த காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் காதல் படங்களாக அமைந்தன. அப்போதைய இளம் நடிகர்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, பிரபுதேவா உள்ளிட்டவர்கள் காதல் கதைகளில் நடித்துதான் தங்களை முன்னணி நடிகர்களாக வளர்த்துக் கொண்டனர். அப்படி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த திரைப்படம்தான் காதல் கோட்டை.

   

அஜித், ஹீரா, தேவயாணி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அதுவரை இல்லாத புதுமையாக காதலர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே காதலிப்பார்கள். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில்தான் பார்த்துக்கொண்டு காதலை வெளிப்படுத்துவார்கள்.

வெள்ளிவிழா கண்ட இந்த திரைப்படம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு காதல் திரைப்படமாக இருந்துள்ளது. ஆனால் இந்த கதையை முதலில் யோசித்த போது இயக்குனர் அகத்தியனுக்கே முழுதாக அந்த கதை மேல் நம்பிக்கை இல்லையாம். இதை எப்படி படமாக்குவது என சந்தேகத்தில் இருந்தாராம்.

அப்போது அவரிடம் பணியாற்றிய வீரபாண்டிய என்ற உதவி இயக்குனர் தன் வாழ்க்கையில் இதுபோன்று நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கூறியுள்ளார். வீரபாண்டியன் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கதையை படித்துவிட்டு ஒரு பெண் அவரைப் பார்க்காமலேயே காதலித்துள்ளார். பல வருடங்களாக தொடர்ந்த அவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்தது. இந்த கதையைக் கேட்டபின்னர்தான் அகத்தியன் முழு நம்பிக்கையோடு காதல் கோட்டை திரைப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார்.

author avatar