“ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?”…. இரவோடு இரவாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…. தொண்டர்கள் ஷாக்…!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் தற்போது இல்லத்திலேயே ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் இன்று மிக விமரிசையாக நடைபெறவிருந்த திமுகவின் முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் விரைந்து குணமடைய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி நிர்வாகிகளும் தங்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்கள் வழியாகத் தொடர்ச்சியாக விருப்பங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.