பூமிக்கு அடியில் இருக்கும் அணுசக்தி மையத்திற்கே இந்த கதியா?… அமெரிக்காவின் அடுத்த டார்கெட் எது?… முழு பின்னணி இதோ..!!!

By Rajeshwari on பங்குனி 3, 2026

Spread the love

ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சியின் உயிர்நாடியாகக் கருதப்படும் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. பூமிக்கடியில் அமைந்துள்ள இந்த மையத்தின் நுழைவாயில் கட்டடங்கள் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் சர்வதேச அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், அணு உலை அமைந்துள்ள உட்பகுதிகள் மற்றும் யுரேனியம் செறிவூட்டும் பிரிவுகளில் தற்போதைக்குக் கூடுதல் பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், கதிர்வீச்சு அபாயம் கண்டறியப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாகச் சீரமைக்கப்படாத நிலையில், இந்த புதிய தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

   

இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. அணுஆயுதத்திற்குத் தேவையான 90 சதவீத தூய்மையான யுரேனியத்தை அடைய ஈரான் முயற்சி செய்து வரும் நிலையில், நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று முக்கிய மையங்களே அவர்களின் இலக்காக உள்ளன.

   

மேலும் தற்போதைய தாக்குதலால் நடான்ஸ் மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணி பாதிக்கப்படுமா என்பது குறித்து ஐஏஇஏ தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரானின் முக்கியத் தலைவர்கள் குறிவைக்கப்படுவதும், அணுசக்தி கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதும் இரு தரப்பிற்கும் இடையிலான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.