மகாத்மா காந்தியோட நீங்க எப்படி இவங்கள Compare பண்ணலாம்…? டென்ஷன் ஆன வெங்கட் பிரபு…

By admin on ஆவணி 18, 2024

Spread the love

இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய சகோதரர் கங்கை அமரன். கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். கங்கை அமரனின் மூத்த மகன் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் இயற்பெயர் வெங்கட் குமார் என்பதாகும். இவரின் இளைய சகோதரனான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ஆவார்.

இசைஞானி இளையராஜா அவர்களின் மகன்களான இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் ஸ்டூடியோக்களில் தனது இளம் வயதில் பின்னணி இசையில் பாடி வந்தார் வெங்கட் பிரபு. பின்னர் 1996 ஆம் ஆண்டு அவரது சகோதரர் பிரேம்ஜி அமரன் மற்றும் குழந்தை பருவ நண்பரான SPB சரண், யுகேந்திரன் ஆகியோருடன் இணைந்து அடுத்த தலைமுறை என்ற பெயரில் இசை குழுவை நிறுவினார்.

   

   

பின்னர் 1997 ஆம் ஆண்டு தனது தந்தை கங்கை அமரன் இயக்கிய பூஞ்சோலை என்ற படத்தில் சங்கீதாவுக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார் வெங்கட் பிரபு. பின்னர் படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த வெங்கட் பிரபு 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

 

தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சரோஜா, 2019 இல் கோவா, 2011 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து பிளாக்பஸ்டர் திரைப்படமான மங்காத்தா, 2013 ஆம் ஆண்டு பிரியாணி, 2015 ஆம் ஆண்டு மாஸ், 2021 ஆம் ஆண்டு மாநாடு போன்ற வணிக ரீதியான வெற்றி படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. தற்போது இந்த ஆண்டு வெங்கட் பிரபு நடிகர் விஜயை வைத்து பிரம்மாண்ட திரைப்படமாக கோட் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கோட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, நடிகர் விஜயின் கட்சியை பற்றியும் அரசியலைப் பற்றியும் மகாத்மா காந்தி பற்றியும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதால் கடுப்பாகி டென்ஷனாக கத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி என்னவென்றால், மகாத்மா காந்தி இந்திய தேசத்தின் தந்தை. ஆனால் நீங்கள் அவரின் பெயரை வைத்து கோட் திரைப்படத்தில் நாயகன் தண்ணி அடிப்பது போல் காட்சி இருக்கிறதே என்று கேள்வி கேட்டனர். அதற்கு வெங்கட் பிரபு மகாத்மா காந்தி வேறு நாமெல்லாம் வேறு. அவரோடு யாரையுமே கம்பேர் செய்யவே முடியாது. காந்தியின் பெயர் வச்சா காந்தியாயிருவாங்களா கண்டிப்பா கிடையாது. என் பிரண்டு கூட காந்தினு பெயர் கொண்ட ஒருத்தர் இருக்கிறார். அவர் என்னெல்லாம் வேலை பண்ணுவாருன்னு தெரியுமா. அதனால காந்தி ஒரு பெரிய மாமனிதர். அவரோட நம்ம யாரையும் கம்பேர் பண்ண கூடாது அந்த பெயர் இருப்பதினால் நாம அவர் ஆகிட முடியாது என்று டென்ஷனாக கத்தியுள்ளார் வெங்கட் பிரபு.