Categories: சினிமா

MR ராதாவின் மகள் என்றே தெரியாமல் ராதிகாவை தேர்வு செய்த பாரதிராஜா.. ஆடிஷன் எப்படி செஞ்சார் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் சக்கைப் போடு கொண்டிருக்க, அவர் இயக்கத்தில் நடிக்க எத்தனையோ முன்னணி நடிகர்கள் ஆர்வமாக இருந்துள்ளார்கள். ஆனால் தன்னுடைய அடுத்தபடத்தில் சுதாகர், ராதிகா என புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அந்த படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

முதலில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக அவர் ராதிகா தேர்வு செய்திருக்கவில்லை. ரயில் படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு படக்குழுவினர் 78 பேருடன் அங்கே தங்கியிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்த நடிகை ஷூட்டிங்குக்கு வரவில்லை.

உடனே சென்னை திரும்பிய பாரதிராஜா எப்படியாவது ஹீரோயினை பிடிக்க வேண்டும்  என்று தேடிக் கொண்டிருந்த போது ஒரு நடன இயக்குநரிடம் இருந்த ஒரு ஆல்பத்தில் ராதிகாவைப் பார்த்ததும் அவருக்கு மின்னல் அடித்துள்ளது. உடனே ராதிகா வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் அம்மாவிடம் அனுமதி பெற்று ராதிகாவுக்கு பாவாடை தாவணி அணிந்து சில ஆங்கிள்களில் அவரை நடிக்க சொல்லி பார்த்து ஓகே சொல்லியுள்ளார்.

அதன் பின்னர் நடன இயக்குனர் புலியூர் சரோஜாவை வைத்து நடன அசைவுகளையும், சினிமா நளினங்களையும் சோதித்துப் பார்த்த பின்னர் அவருக்கு முழு திருப்தி.  ஆனால் அப்போது வரை ராதிகா நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் என்பது தெரியவில்லையாம். ராதிகாவும் தான் எம்  ஆர் ராதாவின் மகள் என்று சொல்லவில்லையாம்.

இப்படி அறிமுகப்படுத்திய ராதிகா முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கியதோடு, இன்று வரை சினிமா, சின்னத்திரை என தொடர்ந்து இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

11 minutes ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

22 minutes ago

“பார்த்திபனுக்கு வந்த அந்த ஒரு கேவலமான மெசேஜ்”… கடுப்பான ராதிகா… பாக்கியராஜ் இறுதி சடங்கில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த தனஞ்செயன்…!

சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…

27 minutes ago

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

44 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?… கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா”…. திடீரென இணையத்தில் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…

51 minutes ago

FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

58 minutes ago