விபத்து காப்பீடு, சிகிச்சை, வீடு, இலவச உணவு.. தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை அறிவித்த தமிழக அரசு….!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். அதில், தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும். 3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். சுயதொழில் தொடங்க 3.5 லட்சம் மானியம் வழங்கப்படும். 6 சதவீதம் வட்டி மானியம். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில புதிய உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் காப்பீடு உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு 6 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.