“டேபிள் போட கூடாது…” போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் ஹோட்டல் அதிபர் தீக்குளிப்பு…. அலறி துடித்த பயங்கரம்…. நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பீம்கல் காவல்நிலைய வளாகத்திலேயே ஹோட்டல் உரிமையாளர் சுதாகர் என்பவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீம்கல் நகரில் ஹோட்டல் நடத்தி வரும் சுதாகரிடம், இரவு 10 மணிக்கு மேல் கடைக்கு வெளியே போடப்பட்டிருந்த டேபிள்களை அகற்றுமாறு போலிஸார் கூறியுள்ளனர். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என உறுதியளித்த நிலையிலும், பீம்கல் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர் காவல்நிலைய வளாகத்திலேயே தீக்குளித்துள்ளார்.

   

உடலில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் உடனடியாக ஆர்மூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினரின் கெடுபிடியே இதற்குக் காரணம் என சுதாகரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.