மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை வினுஷா… பிக் பாஸுக்கு திரும்பவும் போகாததுக்கு இதுதான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Begam on மார்கழி 1, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி  வரும் இந்த ஷோவில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் களமிறங்கினர்.

   

வாரம் ஒரு எலிமினேஷன் என தற்போது வரை 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே  வந்த 5  போட்டியாளர்களையும் ஏற்கனவே இருந்த ஹவுஸ்மேட்கள் எதிரிகளாகவே பார்த்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே, சமீபத்தில் பிக் பாஸ் அதிரடியான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

   

 

அதன்படி 3 வைல்டு கார்டு  போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர் என்றும்,  அவர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார் பிக் பாஸ். இதனால் பயங்கர அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் இருந்தனர். இதைத் தொடர்ந்து அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேற்றப்பட்டு  விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இதில் வினுஷாவும் களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லாதது ரசிகர்களை வருத்தமடைய வைத்தது. இந்நிலையில் நடிகை வினுஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…