திக்… திக்… ஆட்டோ சவாரியில் கொடூரம்… மாரடைப்பு என நினைத்த குடும்பம்… பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 26, 2026

Spread the love

ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மாரடைப்பு மரணமாகக் கருதப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக மாறிய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 43 வயதான வழக்கறிஞர் எல்.கே. கிரிஷ் என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில், கிரிஷ் மாரடைப்பு காரணமாகத்தான் உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், அவருடைய குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

பிரேத பரிசோதனை அறிக்கையில், கிரிஷின் உடலில் காயங்கள் இருந்ததும், மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதையடுத்து, இந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.