பள்ளியில் வெடித்த ரணகளம்!… நடுங்க வைத்த தாக்குதல்… தலைமை ஆசிரியரைத் தாக்கத் துணிந்தது ஏன்?… அதிர்ச்சி பின்னணி…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

துருக்கியின் கோன்யா மாகாணம் இஸ்மில் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில், மாணவரின் பை தொலைந்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை வன்முறையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் தனது பிள்ளை பள்ளி மைதானத்தில் விட்டுச் சென்ற பையைத் தேடி திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த பெற்றோர் ஒருவர், காவலாளியின் தடையையும் மீறி ஆவேசமாக உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் அவர் பள்ளியின் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கு கூடியிருந்த பிஞ்சுக் குழந்தைகளின் முன்னிலையிலேயே அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

மற்ற ஆசிரியர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த நபரைத் தடுத்து வெளியேற்றினர். தகவலறிந்து வந்த பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட பெற்றோரைச் சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தாக்குதலின் போது அங்கிருந்த சிறு குழந்தைகள் அச்சத்தில் உறைந்ததும், அப்போது கலங்கி நின்ற ஒரு மாணவரை ஆசிரியர் ஒருவர் அரவணைத்துத் தைரியமூட்டியதும் பள்ளி வளாக கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி அனைவரையும் உலுக்கியுள்ளது.