“டிரைவர் லீவு.. ஸ்டீயரிங் பிடித்த பிரின்சிபல்…” பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் கவிழ்ந்து கோர விபத்து… கதறும் பெற்றோர்…!!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர் சாம்பா மாவட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் ஒன்று நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரஸ்வதி ஞான் மந்திர் பள்ளியைச் சேர்ந்த இந்த வேனை, வழக்கமான ஓட்டுநர் விடுப்பில் இருந்ததால் பள்ளித் தாளாளரே ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது வேன் மோதி கவிழ்ந்ததில், அதிலிருந்த ஒரு ஆசிரியை மற்றும் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்தக் கொடூர விபத்தில் சிக்கிய குழந்தைகளுக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்கள், மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் நிலையைக் கண்டு கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.

Devi Ramu

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

1 மணத்தியாலம் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

2 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

2 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

2 மணத்தியாலங்கள் ago