ஐயோ கொடுமையே… லாரி மீது பொலேரோ வாகனம் மோதி கோர விபத்து… 7 தொழிலாளர்கள் பரிதாப பலி… குஜராத்தை உலுக்கிய சோகம்…!!

By Swetha on ஐப்பசி 10, 2026

Spread the love

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவிற்குள் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பொலேரோ வாகனம், லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்தமேற்கு கட்ச் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தின் தீவிரத்தால் சிதைந்த பொலேரோ வாகனத்திற்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை வெளியேற்ற கொக்கிகள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புஜ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

   

காவ்டா பூங்காவிற்குள் வாகனங்கள் எவ்வாறு இயங்கின மற்றும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் செயல்பட்டு வரும் காவ்டா மண்டலத்திற்குள் நிகழ்ந்த முதல் பெரிய சாலை விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.