2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்காகத் தமிழக அரசு 198 கோடியே 84 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அவர்களின் பதவி மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை வழங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 45,000 வரை மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது ரூ. 45,000 இதில் எது குறைவான தொகையோ அது கணக்கிட்டு வழங்கப்படும்.
அதேபோல், மாவட்டத் தேர்தல் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவுப் பணியாளர்கள், பறக்கும் படையினர், காணொளிக் கண்காணிப்புக் குழுவினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் மண்டல உதவியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 30,000 வரை மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தொடர்புடைய பணியாளர்களுக்கு அவர்களின் ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 20,000 வழங்கப்படும். தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய மூத்த நிரலாளர்களுக்கு ரூ. 20,000, தரவு இயக்குநர்களுக்கு ரூ. 10,000 மற்றும் பிரிவு எழுத்தாளர்களுக்கு ரூ. 7,500 எனப் பணிப் பிரிவுகளுக்கு ஏற்ப நிதியுதவி பிரித்து வழங்கப்படவுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…