“ரோபோக்களுக்கும் இனி வலிக்கும்” பயமுறுத்தும் எதிர்காலம்… ‘செயற்கைத் தோல்’ கண்டுபிடித்து அசத்திய ஹாங்காங் விஞ்ஞானிகள்…!

By Soundarya on தை 5, 2026

Spread the love
மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் தொடுதல் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையில், ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக (CityU) விஞ்ஞானிகள் ‘செயற்கைத் தோலை’ (Neuromorphic E-Skin) உருவாக்கிப் புரட்சி செய்துள்ளனர். இந்த அதிநவீன மின்னணு தோல் மூலம், ரோபோக்கள் மனிதர்களைப் போலவே புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை அதிவேகமாகப் புரிந்துகொண்டு, ஆபத்துகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனைப் பெறுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகிறது. பொதுவாக ரோபோக்கள் சென்சார்கள் மூலம் தகவல்களைப் பெறும் போது, அவற்றைச் செயலி (Processor) பகுப்பாய்வு செய்ய நேரம் எடுக்கும். ஆனால், இந்த ‘நியூரோமார்பிக் இ-ஸ்கின்’ (Neuromorphic E-Skin) தொழில்நுட்பம், மனித நரம்பு மண்டலத்தைப் போலவே தகவல்களை உடனுக்குடன் கடத்தி, மிகக் குறுகிய காலத்தில் ரோபோக்களைச் செயல்பட வைக்கிறது. இது மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோக்கள் மற்றும் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும் இயந்திரங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.