“பகீர்… யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த தாய்…! கணவர் அதிரடி கைது…!”

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சசிகலா, தனது இரண்டாவது பிரசவத்தை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி அவருக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு சசிகலாவுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவை குடும்பத்தினர் உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டும் நிலைமை சீராகாததால், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் ஊத்துக்குளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட மருந்தக ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது கொலையாகாத மரணம் விளைவித்தல் மற்றும் பிரசவத்தை மறைத்து தனிப்பட்ட முறையில் கையாளுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டிலேயே பிரசவம் பார்க்க தூண்டியது யார், மருத்துவ ஆலோசனை ஏதேனும் பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.