அட கொடுமையே… யூடியூப் வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்…? ரத்தப்போக்கால் துடிதுடித்து இறந்த தாய்… திருப்பூரில் பயங்கரம்…!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் – சசிகலா தம்பதியினருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், இரண்டாவது குழந்தையை இயற்கை முறையில் பிரசவிக்க வைக்க அந்த தம்பதியினர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் நீண்ட நாட்களாக யூடியூப்பில் வீட்டில் வைத்தே பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து வந்துள்ளனர்.

கடந்த ஜூன் 24, 2026 அன்று சசிகலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, மருத்துவமனைக்குச் செல்லாமல் கார்த்திக் மற்றும் அவரது தாயார் இணைந்து யூடியூப் வீடியோக்களின் வழிகாட்டுதலோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். சசிகலா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும், பிரசவத்தின் போது அவருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதனை அவர்கள் சாதாரணமாக நினைத்தாலும், நிலைமை மிகவும் மோசமடைந்ததால் சசிகலா உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

   

பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிகலா, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும், யூடியூப் வீடியோவை நம்பி நடந்த இந்தச் சோகமான சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கணவர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.