முக்கிய திருவிழாக்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாகை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 1) ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை ஒட்டி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியான நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 13ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
