தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த நிலையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு டிட்வா என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புயல் இன்று உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகின்றார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உதவி மையங்கள் அமைப்பது மற்றும் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
