சத்தீஸ்காரில் உள்ள கோவில்களில் 10 வருடங்களாக தொடர்ந்து உண்டியல் திருட்டு நடைபெற்ற வருகிறது. இதை யார் செய்தது? என்று அதிகாரிகள் திணறி வந்த நிலையில், HIV பாசிட்டிவ் பெற்ற நபர் ஒருவர் இதை செய்துள்ளதாக தெரியவந்தது.
கடந்த வியாழக்கிழமை திருட்டில் ஈடுபட்ட நபர் (45) பிடிபட்டுள்ளார்.கடந்த சில வருடங்களாக, பல கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், தனக்கு HIV பாசிட்டிவ் வந்திருந்ததால், கடவுள் மீது உள்ள நம்பிக்கை போய்விட்டதாகவும், கடவுளை பழிவாங்குவதற்காக உண்டியலை திருடி வருவதாக கூறியுள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு, ஒரு பாலியல் குற்றத்திற்காக ஜெயில்தண்டனை அனுபவித்த பொழுது HIV பாசிட்டிவ் பெற்று இருக்கிறார்.
போலீசாரின் மேல்விசாரணையில், இவர் பத்துக்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் உண்டியலில் விழுந்த காசுகளை மட்டுமே அவர் எடுத்ததாகவும், அதில் இருக்கும் நகை மற்றும் பிற பொருட்கள் எடுக்கவில்லை என்பதாகவும் கூறுகிறார். மேலும் இவர் திருடுவதற்கு முன்பாக தன்னுடைய ஸ்கூட்டரை திருடும் இடத்திலிருந்து, வெகு தூரத்தில் நிறுத்தி விடுவாராம், இதனால் தான் இவர் இத்தனை ஆண்டுகளாக போலீசாரில் பார்வையில் இருந்து தப்பி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு ஜெயின் கோயிலை உடைத்து அங்கு திருடி திருடிய பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இதில் இவர் திருடிய காசு ரூ. 1282 மற்றும் அவரது ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…