இனி திருமணத்திற்கு முன்பு HIV பரிசோதனை கட்டாயம்..? புதிய சட்டம் கொண்டுவரும் அரசு..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

மேகாலய மாநில சுகாதாரத்துறை மந்திரி அபிபரின் லண்டோ செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், ” எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலய மாநிலம் ஆறாவது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்ஐவி பாதித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே திருமணத்திற்கு முன்பாக எச்ஐவி பரிசோதனை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம்.

கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதாக்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாமும் ஏன் அதை சட்டமாக்க கூடாது? இது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக மாநில துணை முதல் மந்திரி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.