‘தங்க தாமரை மகளே’… அழகில் அம்மாவை மிஞ்சும் நடிகை கஜோலின் மகள்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By Mahalakshmi

Updated on:

நடிகை கஜோல் தமிழ் சினிமாவில்  பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.  பாலிவுட்டையே கலக்கும்  நடிகையாக வலம் வருபவர் நடிகை கஜோல். இவர் தற்போது தனது ஒரே மகளான நைசாவின்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த கஜோலின் ரசிகர்கள் இவரின்  மகளாக இது என ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

   

ஹிந்தி திரைபடத்திலேயே அதிகமாக நடித்துள்ள நடிகை கஜோல் , நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பல படங்களை நடித்து வெற்றி படங்களாக்கி ஹிந்தி சினிஉலகில் கொடிகட்டி பறக்கிறார். நடிகை கஜோலுக்கு இந்தி திரையுலகம் பிலிம்பேர் விருதை  வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசால்  நடிகை கஜோலுக்கு “பத்மபூஷன்”  விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மின்சான கனவு படத்தில் மட்டுமில்லாமல்  தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி 2” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.
நடிப்பதில் மட்டுமே முக்கியம் செலுத்தாமல் சமூக ஆர்வலராகவும் குழந்தைகளுடன் பணியாற்றுவதையே முக்கியமாகக் கொண்டிருந்தார். தற்போது  நடிகை கஜோல்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 வயதான தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi