Categories: சினிமா

2024-இல் வெளியாகி வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்கள்… இதோ மொத்த லிஸ்ட்..!

Spread the love

இந்த வருடம் ரிலீஸ் ஆகி அதிக வசூலை குவித்த முதல் ஐந்து படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

இந்த வருடம் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான G.O.A.T. இந்த திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தனர். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன் . இந்த திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார் . இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. படம்  350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் லால் சலாம் மற்றும் வேட்டையன். லால் சலாம் படம் படுதோல்வி சந்தித்த நிலையில் வேட்டையன் படம் ஆறுதல் வெற்றியை கொடுத்தது. ஆயுத பூஜை விடுமுறையில் இந்த படம் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரித்தது இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார் . இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 280 கோடி வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

தனுஷின் பிறந்தநாள் ஒட்டி வெளியான திரைப்படம் ராயன். இந்த படத்தின் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் அதை இயக்கியதும் தனுஷ் . அவருடைய ஐம்பதாவது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை சந்தித்தது. பாக்ஸ் ஆபிஸில் 160 கோடி வசூலை வாரிக்கு வைத்து நான்காம் இடத்தில் உள்ளது.

விஜய் சேதுபதி ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்தை நித்திலன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு பிக் பாஸ் சாச்சனா, நட்டி நட்ராஜ், அபிராமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் ரிலீஸ் ஆன பொழுது 110 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது சீனாவில் 40 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அங்கேயும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை இந்த படம் ஒட்டுமொத்தமாக 150 கோடிக்கு மேல் வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago