BREAKING: இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு… சற்றுமுன் பரபரப்பு உத்தரவு….!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை சபாநாயகரிடம் நிலுவையில் இருந்த சூழலில், அவர்களது ராஜினாமாவை ஏற்றது தவறு என்றும், எனவே மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டோர் உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.