விஜய்க்கு வெற்றி… தவெக கொடிக்கு தடையில்லை… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

By Soundarya on ஆவணி 18, 2025

Spread the love

தவெக  தலைவர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க  உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையானது தங்கள் கொடியை போல் இருக்கும் தவெக கொடிக்கு தடை விதிக்க கோரி  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரு கொடிகளையும் ஒப்பிடுகையில்  தமிழக வெற்றிக் கழகம் கொடி முற்றிலும் வேறுபாடானது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை. அதனால் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது