BREAKING: தமிழக அரசுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி… சற்றுமுன் அதிரடி தீர்ப்பு…!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. முன்னதாக, இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்திருந்த நிலையில், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்ததுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.