“டேய் ரொமான்ஸ் பத்தல….என்கிட்ட 2 வாரம் ட்ரைனிங் வா….” குரேஷியை பங்கம் பண்ணிய மாதம்பட்டி…..!!!

By Srimathi on புரட்டாதி 6, 2025

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கேட்டரிங் தொழில் அதிபர். இவர் தமிழ்நாட்டில் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல விஐபிகளின் திருமண நிகழ்வுக்கு தனது டீமை வைத்து உணவு சமைத்து கொடுக்கிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜாய் கிரிசில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளரோடு லிவிங் டூ கெதர்ரில் வசித்து வந்தார்.

திடீரென்று ஒரு நாள் கிரிசில்டா, மாதம்பட்டியை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், நேரில் சென்று சந்தித்தால், தகாத வார்த்தைகளால் திட்டி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது நடந்து சில நாட்களிலேயே மாதம்பட்டி தன்னுடன் ரொமான்டிக்காக பேசிய சில வீடியோவை கிரிசில்டா வெளியிட்டுள்ளார்.

   

அதில் “ஏ பொண்டாட்டி…என்ன பண்ற…மிஸ் யூ…லவ் யூ…” என ரங்கராஜ் ரொமான்ஸாக பேசியிருந்தார். மேலும் ஓணம் பண்டிகை ஒட்டி, “மனைவியிடம் எப்படி ப்ரொபோஸ் செய்வது என்பதை மாதம் பட்டி ரங்கராஜ் அண்ணன் ஸ்டைலில் செய்து காட்டுகிறேன்” என கேப்ஷன் கொடுத்து, ரங்கராஜை போலவே பேசி ஒரு வீடியோவை குரேஷி வெளியிட்டு இருந்தார். அதற்கு மாதம்பட்டி, “டே ரொமான்ஸ் பத்தல டா… ரெண்டு வாரம் என்கிட்ட ட்ரெய்னிங் வாடா” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இவரின் கமெண்டுக்கு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த வீடியோவை பலருக்கு பகிர்ந்து, “இவன் சந்தோஷமா தான் இருக்கிறான்” என இணைவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.