இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக… சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் மயில்சாமியின் வீடியோ இதோ…

By Begam on மாசி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வந்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் போன்ற அடையாளங்களை பெற்றவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர்.

   

ஆனால் வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். சினிமா ஆசை காரணமாக சென்னை வந்து சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

   

 

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது முன்வைத்து வந்தார். இவர் தீவிரமான எம்.ஜி.ஆர் பக்தர். இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக நடிகர் மயில்சாமி திடீரென உயிரிழந்தார்.

தற்பொழுது நடிகர் மயில்சாமி சிவராத்திரி விழாவில் கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில், நடிகர் மயில்சாமியும், டிரம்ஸ் சிவமணியும் இணைந்து பங்கேற்ற இறுதி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி ட்ரம்ஸ் சிவமணியுடன் கலந்து கொண்டுள்ளார். நடிகர் மயில்சாமி மிகவும் எளிமையானவர். மேலும் ‘வண்டலூர் சிவன் கோவிலுக்கு ரஜினி சாரை கூட்டிக்கொண்டு வரவேண்டும்’ என்பதுதான் மயில்சாமி இறுதி ஆசையாக இருந்தது என்றும் கூறியுள்ளார் டிரம்ஸ் சிவமணி.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து கலந்து கொண்ட சிவராத்திரி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வைரல் வீடியோ….