Connect with us

CINEMA

‘கெட்டவன்’ முதல் ‘கான்’ வரை.. டிராப் ஆன சிம்பு படங்கள்.. நெல்சனுடன் சேர்ந்தும் ராசியில்லாமல் போன படம்..

பொதுவாக நடிகர்கள் பலரும் நடித்து முடித்து வைக்கும் படங்கள் ஏராளமாக இருக்கும். அதிலும் தொடக்கக் காலத்தில் தங்கள் மார்க்கெட்டை பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல படங்களை வரிசையாக நடித்து கொடுப்பார்கள். ஆனால் அத்தனை படங்களும் வெளியே வருகிறதா என்றால் அது சந்தேகம் தான். அப்படி சிம்பு நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கான் :

   

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, காத்ரீன் தெரேசா, ஜகபதி பாபு உட்பட பலர் நடிப்பில் உருவானது கான். 2015-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்தில் சிம்பு ஒரு முருகப் பக்தராக நடித்திருந்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2017-ம் ஆண்டு வெளியானது. ஆனால் படம் நிதி பற்றாக்குறையால் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

#image_title

ஏ/சி :

நியூ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா சிம்பு மற்றும் அசினை வைத்து ஏசி என்ற படத்தை இயக்க இருந்தார். இப்படத்திற்கான போட்டோ ஷூட் எல்லாம் எடுக்கப்பட்ட நிலையில், படம் படப்பிடிப்புக்கே செல்லாமல் பாதியிலேயே ட்ராப் அவுட் ஆனது. யுவன் சங்கர் ராஜா இசையில் 2010-ம் ஆண்டு எடுக்க இருந்தப் படம் சில பல காரணங்களால் படப்பிடிப்புக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டது.

வேட்டை மன்னன் :

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வரும் நெல்சன் முதன் முறையாக இயக்கியப் படம் வேட்டை மன்னன். சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்தவர் சிம்புவை வைத்து வேட்டைமன்னன் படத்தை இயக்கினார். படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. நிதி நெருக்கடியால் இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், மீண்டும் சின்னத்திரைக்கே சென்றார் நெல்சன். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவின் எண்ட்ரி கொடுத்தார்.

#image_title

வாலிபன் :

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் சிம்பு இயக்கி நடிக்க இருந்த திரைப்படம் வாலிபன். இப்படத்தில் சிம்பு மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டதால், பட்ஜெட் அதிகரித்தது. இதனால் இப்படம் டிராப் ஆனதாக கூறப்படுகிறது.

#image_title

கெட்டவன் :

வாலிபன் படத்தைப் போன்றே 2007-ம் ஆண்டு சிம்பு இயக்கி நடிக்க இருந்தப் படம் கெட்டவன். 2007-ல் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தை 2017-ம் ஆண்டு மீண்டும் தொடங்க இருப்பதாக சிம்பு தனது சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், டி.ஆர்.பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2007-ம் ஆண்டு இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 20017-ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட இருந்த படப்பிடிப்பு மீண்டும் சில பல காரணங்களால் டிராப் அவுட் ஆகியது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top