பெங்களூரை சேர்ந்த பிசினஸ் பெண்மணி தான் கிரண் மசும்தார். இவரின் தான தர்மத்தாலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தவர். 2023 ஆம் வருடம் கிட்டத்தட்ட 96 கோடி ரூபாய் இவர் தானமாக வழங்கியுள்ளார். 96 கோடி தானமாக வழங்கிய இவர் யார் ? அப்படி என்ன பிசினஸ் செய்கிறார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1953 ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறக்கிறார் கிரண் மசும்தார் ஷா. பிஷப் காட்டன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், அங்கு புத்திசாலியான மாணவியாக திகழ்ந்துள்ளார். தாவரவியல் படிப்பில் பட்டம் பெட்ரா இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது கனவு, ஆனால் மருத்துவம் படிக்க உதவித்தொகை கிடைக்காததால், 1975 ஆம் ஆண்டு வெளிநாடு சென்று மேற்படிப்பை முடித்துள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பிய கிரண், பயோகோன் என்ற நிறுவனத்தை 10 ஆயிரம் முதலீடு செய்து துவங்கியுள்ளார். பப்பாளியில் இருந்து பெறப்பட்ட பப்பேன் என்ற நொதியைப் பிரித்தெடுப்பதன் மூலம் பயோகான் தனது வணிகத்தைத் தொடங்கியது. இறைச்சியை மென்மையாக்குவதற்கு பாப்பேன் பயன்படுத்தப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. பயோகான் பீர் தெளிவுபடுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஐசிங்க்ளாஸ் பிரித்தெடுக்கும் தொழிலிலும் இறங்கியது. ஒரே வருடத்தில் அது லாபகரமான நிறுவனமாக மாறியது.
இன்று அந்த நிறுவனத்தின் வருமானம் கிட்டத்தட்ட 34 ஆயிரம் கோடி ரூபாய். இதன் நிறுவனரான கிரணின் சொத்து மதிப்பு 23 ஆயிரம் கோடி. இப்படி பெரும் கோடீஸ்வரியான 70 வயதாகும் கிரண் அவ்வப்போது தானமும் செய்து வருகிறார். அந்தவகையில் போன வருடம் 96 கோடி தானம் செய்துள்ளார்.
ஒரு பெண்ணாக அதுவும் 60 வயதிலும் பிசினஸ் செய்து கலக்கி வரும் கிரண் மசும்தார் ஷா நம் அனைவருக்கும் ஒரு ரோல் மாடல் என்று சொன்னால் மிகையாகாது.