“அவ ஆசைதான் எனக்கு முக்கியம்!”… கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… நேரில் பிடித்த கணவர் கொடுத்த செம ட்விஸ்ட்…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவநாத் ராஜ்பார் என்பவர் டெல்லியில் வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி சரிதா தனது மூன்று குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருந்த காலகட்டத்தில், ரயிலில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வரும் 25 வயதான அஜய் என்ற இளைஞருடன் சரிதாவுக்கு நெருக்கம் ஏற்பட்டு, அது தீவிர காதலாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சரிதா தனது காதலன் அஜய்யுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

தகவலறிந்து சொந்த ஊர் திரும்பிய ஜீவநாத், பல இடங்களில் தேடி இறுதியில் ஒரு ரயில் நிலையத்தில் இருவரையும் கண்டுபிடித்தார். குடும்பத்துக்காகத் தன்னுடன் மீண்டும் வந்துவிடும்படி மனைவியிடம் அவர் கெஞ்சியபோதும், இனி அஜய்யுடன் மட்டுமே வாழப்போவதாக சரிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். மேலும், கணவர் போதிய பணம் அனுப்பாததும், அடிக்கடி சண்டையிட்டதுமே தனது இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மனைவியின் மனமாற்றத்தையும் உறுதியான முடிவையும் புரிந்துகொண்ட ஜீவநாத், வேறு வழியின்றி அவரது விருப்பப்படியே இருவரையும் பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைத்தார்.