செம்ம கியூட்… நடிகை சயீஷாவுடன் டான்ஸ் ஆடும் அவரது மகள்… வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

By Begam on ஆடி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சயிஷா. இவர் 2015-ல் வெளியான ‘அகில்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ஹிந்தியில் கால் பதித்த இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

   

அதன் பிறகு வனமகன், குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என பல ஹிட் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை சாயிஷா. இவர் நடிப்பை தாண்டி நடனம் ஆடுவதிலும் வல்லவர். இவர் தனது உடம்பை ரப்பர் போல் படைத்து நடனமாடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

 

நடிகை சயீஷா நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் 2019ல்  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்பொழுது அரியானா என்ற மகள் உள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சயீஷா. இவர் தற்பொழுது தனது மகள் அரியானாவுடன் இணைந்து நடனமாடும் க்யூட்டான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ‘நடனத்தில் அம்மாவையே மிஞ்சிடுவார் போலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)