RAIN ALERT: தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலெர்ட்… இந்த மாவட்டங்களில் மழை பொளந்துகட்ட போகுது….!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று முன்தினம் மாலை தென்கிழக்கு வங்க கடல் – பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும்.

மேலும் அதே திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஜனவரி 9 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

   
மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.