தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது புயலாக மாறி நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் எனவும் இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் உருவாவதன் எதிரொளியாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மருந்து பொருட்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாராசிட்டமல், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
