BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழகத்திற்கு வந்த அலர்ட்… உங்க ஊர் இருக்கானு பாருங்க….!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையானது அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.