தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
