Heavy rain

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – இந்த 8 மாவட்டங்களில் 10 மணிக்குள் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கோவை நீலகிரி கடலூர் விழுப்புரம் திருவாரூர் மயிலாடுதுறை நாகை தேனி ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.