BREAKING: 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…!

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு பெரும் குளிர்ச்சியைத் தந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

இந்த மழைப்பொழிவு நாளையும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மே 18) திங்கட்கிழமை அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி என மொத்தம் 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதும், அவசியமாக வெளியே செல்லும்போது தங்களது குடைகளையும், மழைக்கோட்டுகளையும் தவறாமல் கையோடு எடுத்துச் செல்வதும் பாதுகாப்பானது.