கனமழை… நாளை (அக்..22) பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தினார். மேலும் மழையின் தீவிரத்தை கண்காணித்து அக்டோபர் 22 நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனால் இன்று இரவே பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.