தமிழகத்திற்கு புயல் சின்னம்… புரட்டி எடுக்கப்போகும் கனமழை… காலையிலேயே வந்த அலர்ட்…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் சென்னை, காஞ்சி, செங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.