தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகின்றது. இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் லேசான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் டிசம்பர் 2 நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது.
