தமிழகத் தேர்தலில் கொடூரம்: நிறைமாத கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்… திமுக மீது நாம் தமிழர் கட்சி பகீர் புகார்..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஷ் பாத்திமா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றிற்குப் பார்வையிடச் சென்றபோது, திமுகவினர் தன்னைத் தாக்கியதாக அனிஷ் பாத்திமாவின் கணவர் நூ.சே.அம்சத் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் வேட்பாளர் மீதே இத்தகைய வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த அனிஷ் பாத்திமா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேர்தல் களத்தில் ஒரு பெண் வேட்பாளர், அதுவும் கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் நடத்தப்பட்ட இந்தச் செயலால் பாபநாசம் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இது குறித்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.