மாமல்லபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் DJ ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒலிபெருக்கிகள் மற்றும் DJ ஒலிகள் போன்ற எந்த ஒரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும் பொழுது இதயத்துடிப்பில் மாற்றமும், மன அழுத்தமும் கண்டறியப்பட்டது. DJ ஒலிகள் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயத்திற்கு தள்ளுகிறது. பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 100 டெசிபல்லுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம் கேட்டால், காது கேளாத பிரச்சனை ஏற்படும். DJ சத்தங்கள் கர்ப்பிணி பெண்களை பாதிப்பதோடு, ஒலி மாசுபட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாய், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் DJ சத்தத்தால் பாதிக்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கானாவில் ஒரு ரெசார்ட் நடைபெற்ற DJ சத்தம் காரணமாக, அருகில் இருந்த கோழிப்பண்ணையில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்ததாக புகார் வந்துள்ளது. DJவின் விளைவாக, பலவீனமான கட்டிடங்கள் அதிர்ந்து விழ வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக ஹெட்போனை பயன்படுத்தலாம். அவை சத்தத்தை முழுமையாக தடுக்காமல், தெளிவான ஒளியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே DJ ஒளிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
