நாக்கில் வெடிப்பா…? ஈறில் ரத்தமா…? கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள்…!!

By Devi Ramu on தை 30, 2026

Spread the love

நமது வாயில் ஏற்படும் மாற்றங்கள் வெறும் பல் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல, அவை உடலில் ஒளிந்திருக்கும் தீவிர நோய்களின் எச்சரிக்கை மணி என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன். நாக்கில் வெள்ளை நிறம் படர்ந்தால் அது செரிமானக் கோளாறு அல்லது நீர்ச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது.  அதேபோல் நாக்கில் வெடிப்புகள் காணப்பட்டால் உடலில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து அல்லது ரத்தசோகை இருப்பதற்கான அறிகுறியாகும். பற்களில் நீங்காத கறைகள் படிவது மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிவது போன்ற பிரச்சினைகள் முறையற்ற உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நீரிழிவு நோயின் தொடக்கமாக இருக்கலாம்.

வாய் துர்நாற்றம் மற்றும் வாய் வறட்சி போன்றவை கல்லீரல், சிறுநீரகம் அல்லது தைராய்டு கோளாறுகளின் வெளிப்பாடாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றைச் சரிசெய்ய வெறும் வாய் கொப்பளிப்பதோடு நிறுத்தாமல், அன்றாட உணவில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், நட்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். மேலும், போதிய அளவு தண்ணீர் குடிப்பதுடன், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பாதுகாக்க உதவும். வாய் சார்ந்த அறிகுறிகளைக் கவனத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்