Tea

காலையில் டிபனுக்கு பதிலா சிகரட் பிடித்தபடி டீ குடிக்கும் நபரா நீங்க? அப்போ காத்திருக்கு ஆபத்து – இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்…

By Elango on மார்கழி 5, 2025

Spread the love

பெரும்பாலான இளைஞர்கள் காலை நேரங்களில் டிபன் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிகரெட் பிடிப்பது அல்லது டீ குடிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். டீ குடிக்கும்போது உடலில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உட்கிரகிக்கப்படும் தன்மை குறைகிறது. புகைப்பழக்கம் மன அழுத்தத்திற்கான ஹார்மோன்கள் சுரப்பதை அதிகரிக்கும். இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. டீ குடித்தபடி சிகரெட் பிடிப்பது பலரது வழக்கம். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கிறது.

அதுவும் 25 முதல் 30 வயதுடைய இளைஞர்களுக்கு கை நடுக்கம் அதிகரிக்கும். விந்தணு சார்ந்த பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு புகைப்பழக்கத்தை கைவிடுவதுதான். முதலில் புகைபிடிக்க உங்களை எது தூண்டுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். டீ குடிக்கும் போது சிகரெட் பிடிக்கக் கூடாது. சிலர் தலைவலிக்காக சிகரெட் பிடித்தால் அதற்கான மாற்று தீர்வைத் தேட வேண்டும். பெரும்பாலும் இரவில் சரியான தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் உடல் புத்துணர்வோடு இருக்க போராடும். அப்போது டீ மற்றும் சிகரெட்டை தேர்வு செய்வது புத்துணர்வை தருவது போன்ற எண்ணத்தை உருவாக்கும்.

   

எனவே இரவு நேரத்தில் சரியாக தூங்கினாலே டீ மற்றும் சிகரெட் புகை பழக்கத்திலிருந்து எளிதாக விடுபடலாம். டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு 1 அல்லது 2 முறை மட்டுமே டீ குடிக்கலாம். அதையும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவோ, இரவு படுக்கைக்கு செல்லும் முன்போ குடிக்கக்கூடாது. உடல் உழைப்பு உள்ள நேரத்தில் மட்டுமே டீ குடிப்பது சரியானது. அதே நேரத்தில் காலை உணவை கட்டாயம் தவிர்க்கக்கூடாது. காலையில் டிபன் சாப்பிட்டாலே இந்த சிகரெட் மட்டும் டீ குடிக்கும் பழக்கத்தில் இருந்து சுலபமாக விடுபட முடியும்.