ஆஹா..! தினமும் காலையில் 1 டம்ளர் எலுமிச்சை தண்ணீர் குடித்தால்… இத்தனை அதிசயம் நடக்குமா..? குடிச்சித்தான் பாருங்களேன்…!!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

எலுமிச்சம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்றன. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இது ஒரு அருமருந்தாக உள்ளது. காலையில் ஒரு டம்ளர் எலுமிச்சம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நடக்கும் பல அற்புதமான மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சம் பழம் தண்ணீர் – எலுமிச்சம் பழம் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு வைட்டமின் டி அதிகமாக கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நாள் முழுவதும் புத்துணர்வை தருகிறது.

   

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக பராமரிக்கிறது. மேலும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளதால் சருமத்தை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது. எலுமிச்சை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தை பொலிவாக்கி உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.

   

வெதுவெதுப்பான தண்ணீரில் காலையில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிப்பது தொப்பையை குறைக்க உதவும். இது மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கிறது. சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இப்படி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் எலுமிச்சம் தண்ணீ்ர பாதுகாக்கிறது.