முழு முட்டை Vs வெள்ளைக்கரு உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது..? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க..!

By Soundarya on ஜனவரி 25, 2025

Spread the love

பொதுவாக நம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் தினசரி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது முட்டை எடுத்துக் கொள்வது நம்முடைய உடல் நலத்திற்கு மிக மிக நல்லது.  புரோட்டின் போன்ற உணவுகளை சேர்ப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கு புரோட்டின்,வைட்டமின்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் ஆகிவை தேவை,. இவை சமச்சீர் உணவு எனப்படும். தினமும் தேவையான புரோட்டினை பெறுவதற்கு பலரும் முட்டை சாப்பிட்டு வருகிறார்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது.

   

ஒருசிலர்  முழு முட்டை ஆரோக்கியமானது என்று கூறுகிறார்கள். ஆனால் நம் கேள்வி என்னவென்றால் உடலுக்கு அதிக புரோட்டின் கிடைப்பதற்கு முட்டையின் வெள்ளை கரு நல்லதா அல்லது முழு முட்டையும் சாப்பிட வேண்டுமா? என்பதுதான். முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டின் சத்து நிறைந்தது என்பதற்காக கூறப்படுகிறது .மேலும் இதில் கலோரிகள் மிக குறைவாக உள்ளது. எனவே தசை மிக வலுவாக்குவதற்கும், மீட்பதற்கும் சிறந்தவை ஆகும். முட்டையின் வெள்ளை கருவில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இல்லை. எனவே இதை இதயத்திற்கு மிகவும் நன்மை.

   

 

மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த குறைந்த கொழுப்புகள் உணவை பின்பற்ற விரும்புவருக்கு முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சிறந்தது. பொட்டாசியம், கார்போஹட்ரேட்  மற்றும் மெக்னீசியன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது மற்றும் ஆற்றல் உற்பத்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முட்டையின் வெள்ளை கருவில் இல்லாத ஆரோக்கிய கொழுப்புகள் அனைத்தும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது.

இதில் விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் பி1 போன்றவை இதில் உள்ளது. அதனால் தான் முட்டையை பவர் ஹவுஸ் என்று அழைக்கிறார்கள். முழு முட்டையில் ஆரோக்கியமான கொழுப்பு  மற்றும் ஆக்ஸி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.   முழு மூட்டை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இரண்டுமே தனித்தமான ஊட்டச்சத்து நன்மைகளை தான் கொண்டு இருக்கிறது. ஆனால் அவற்றின் புரோட்டின் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் கணிசமாக வேறுபடுகிறது. முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் புரோட்டின் அதிகமாக உள்ளது .

ஒரு பெரிய முட்டையில் உள்ள வெள்ளை கருவில் 3.6 கிராம் புரோட்டின் உள்ளது. முழு முட்டையில 6 கிராம் புரோட்டின் உள்ளது.  ஒரு பெரிய முட்டையின் வெள்ளை கருவில் 11  கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது. குறைந்த கலோரி அதிக புரோட்டினை உணவில் சேர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு அல்லது கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. அத்தியாவசிய விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை தேடுபவர்களுக்கு முழு முட்டை சிறந்ததாக இருக்கும்.