“கலைஞர் மகளிர் உரிமை தொகை” திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை இணைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்ப படிவத்தில் நான்கு முக்கிய எண் விவரங்களை பூர்த்தி செய்யாவிட்டால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உரிமை தொகை பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்.
1. ஆதார் எண் (Aadhaar Number)
2. குடும்ப அட்டை எண் (Ration Card Number)
3. வங்கி கணக்கு எண் (Bank Account Number)
4. வங்கியின் IFSC குறியீடு (IFSC Code)
இந்த எண்கள், பயனாளரின் அடையாளம் காணவும், அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் பயன்படுகிறது. விண்ணப்பத்தில் தவறான தகவல் வழங்கினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஏதேனும் சிறிய தவறு இருந்தால், அதை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விளக்கி கேட்க, சரியான ஆவணங்கள் அளிப்பது நல்லது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், உரிய ஆவணங்களுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்யலாம். உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை என, தனி கவுண்டன் அமைக்கப்பட்டு, அங்கு அனைத்து விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். விண்ணப்பித்து 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தங்களின் விண்ணப்ப நிலையை அறிய, https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முதியோர், விதவை ஊதியம் பெறும் குடும்பங்களில் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அரசின் மகத்தான திட்டதில் சேர்ந்து பலனை அடையலாம்.
