உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்திலுள்ள நயா பஜார் அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியை மது குமாரி தனது மாணவர்களைக் கொண்டு உடல் மசாஜ் செய்யச் சொல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்விப் போதிக்கும் இடத்தில் மாணவர்களைத் தரம் தாழ்ந்த வேலைகளுக்குப் பயன்படுத்திய இச்சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். ஆசிரியை மது குமாரியின் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தீவிரமாகக் கருதிய அதிகாரிகள், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்விப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
उत्तर प्रदेश के चित्रकूट जिले के नया बाजार स्थित एक प्राइमरी स्कूल की..!!
प्रधानाध्यापिका मधु कुमारी का वीडियो सामने आया है, जिसमें वह बच्चों से बेलन से मसाज करवाती दिखाई दे रही हैं।
वीडियो वायरल होने के बाद शिक्षा विभाग ने मामले को गंभीरता से लेते हुए प्रधानाध्यापिका मधु… pic.twitter.com/nRZP0XuxIu
— JIMMY (@Jimmyy__02) March 7, 2026
