திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி – விஜயமங்கலம் சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி இன்று ஒரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து, மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். உயிரிழந்த ஆறு பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
