எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் களமிறக்கப்பட்டு, வேட்புமனு தள்ளுபடியான அருண் குமார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். “வேட்புமனு நிராகரிக்கப்பட்ட உடனேயே தவெகவிலிருந்து விலகிவிட்டேன்” என அருண் குமார் தெரிவித்துள்ள நிலையில், முன்னதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பொறுப்பாளர் தமிழன் பார்த்திபன் “சேலத்தை தவெகவின் கோட்டையாக மாற்றுவேன்” எனச் சூளுரைத்திருந்ததை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எடப்பாடி அதிமுகவின் வலுவான கோட்டையாகத் திகழும் சூழலில், தவெக வேட்பாளரே மாற்று முகாமிற்குச் சென்றுள்ளது அப்பகுதியில் தவெகவின் உட்கட்சிப் பலத்தையும் கட்டமைப்பு வலிமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
